என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
    X

    போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    • மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக என கிருஷ்ணா தரப்பு வாதம்.
    • போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தரப்பில் வாதிடப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்தது என கிருஷ்ணா தரப்பும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

    இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    Next Story
    ×