என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழை - வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தொடர் மழை - வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,463 கனஅடியாக உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 3,416 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 69.13 கன அடியாக உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,463 கனஅடியாக உள்ளது.

    அணை நிரம்பி உள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதியானது கடல் போல காட்சியளிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 3,416 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த 67 ஆண்டுகளில் 36-வது முறையாக நீர் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணை தற்போது நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×