என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்... இல்லையென்றால் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்

    • பரந்தூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மக்களின் முதல்வர் என நா கூசாமல் பேசுகிறீர்களே எப்படி?
    • பரந்தூர் பகுதி விவசாய பெருங்குடி மக்களை தயவு செய்து சந்தித்து பேசுங்கள்.

    சென்னை:

    த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழகத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * பரந்தூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மக்களின் முதல்வர் என நா கூசாமல் பேசுகிறீர்களே எப்படி?

    * பரந்தூர் பகுதியை சுற்றி வசிக்கும் 1500 குடும்பங்கள் முதலமைச்சருக்கு சாதாரணமாக போய்விட்டதா?

    * பரந்தூர் மக்களை ஏன் இன்னும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

    * பரந்தூர் பகுதி விவசாய பெருங்குடி மக்களை தயவு செய்து சந்தித்து பேசுங்கள்.

    * பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்காவிடில் அவர்களை நானே அழைத்துக்கொண்டு தலைமைச்செயலகம் வருவேன்.

    * விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் சரியான இடம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×