என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இது தனி மனித சாதனைகள் இல்லை... கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.
* தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது.
* இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
* இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை.
* இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்.
* திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது.
* மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.
* இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை
* என் 60 ஆண்டுகால பொதுவாழ்வு குறித்து ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் முன்னதாக கூறியிருந்தார்.
* கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார்.
* கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.
* கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.
* கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
* கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.
* நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
* தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போர் 1.43 சதவீதம் மட்டுமே.
* இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.






