என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாட்டுக்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது திராவிட மாடல் ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் 3-ம் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன.
- தி.மு.க. ஆட்சியில் 4,000 கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளோம். இது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத சாதனை.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் 2 நாள் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூகநீதி - சமத்துவம் - மக்கள் நலன் ஆகியவற்றை தி.மு.க. அரசு முக்கியமாக பார்க்கிறது.
* தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.
* மத்திய அரசின் நெருக்கடிகளை தாண்டி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
* தமிழ்நாட்டில் 3-ம் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன.
* சமூகத்தில் எந்த பிரிவினரும் விடுபட்டு விடக்கூடாது என பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
* மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* இந்தியாவில் எந்த மாநிலமும் அடைய முடியாத 11.8% வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
* தமிழ்நாடு முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தி உள்ளது திராவிட மாடல் அரசு.
* இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும்.
* நாட்டிலேயே முதல்முறையாக காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது.
* தி.மு.க. வெற்றி பெற்ற மறுநாளே விடியல் பயண திட்டத்தை தொடங்கி வைத்தோம்.
* சொன்னதை போலவே மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றி காட்டியிருக்கிறோம்.
* தி.மு.க. ஆட்சியில் 4,000 கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளோம். இது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத சாதனை.
* நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்களில் நம் திட்டங்களை பின்பற்றுவதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.






