என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்... 2026-ல் Version 2.0 Loading... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு வரலாறு படைக்கும்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழ்நாடு படைத்த சாதனைகளை கூறினார். மேலும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும். உதகை, தருமபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும். விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கம் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக 5-வது ஆண்டாக அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன் எனது பயணம்.... தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். வாழ்க தமிழ்... வெல்க தமிழ்நாடு... என்றார்.






