என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
    • திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை தி.மு.க. மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளாகக் கூடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

    எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!

    இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!

    நாளை மதுரை வீரகனூரில், தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்! என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×