என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சாலையோரம் நின்ற மக்களுக்கு கைகொடுத்து முதலமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு பயணமாக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் திருவண்ணாமலைக்கு வந்த அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையின் முக்கிய வீதிகளில் ரோடு ஷோ சென்றார்.
சாலையின் இருபுறமும் நின்றிருந்த தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரம் நின்ற மக்களுக்கு கைகொடுத்து முதலமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நல சேவை மையங்களை அவர் திறந்து வைத்தார்.






