என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'காலனி' என்ற சொல் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்து இருந்தார்.
- ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* 'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருப்பதால் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்.
* ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.
'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Next Story






