என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கும் காங்கிரஸ்... தமிழ்நாடு தலைவர் மாற்றம்? செல்வப்பெருந்தகை கூறிய பதில்!
    X

    தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கும் காங்கிரஸ்... தமிழ்நாடு தலைவர் மாற்றம்? செல்வப்பெருந்தகை கூறிய பதில்!

    • தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகவே உள்ளது, எந்தப் பிரச்சனையும் இல்லை.
    • ப. சிதம்பரம் மற்றும் மு.க. ஸ்டாலின் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு இணக்கம் ஏற்பட்டுள்ளது.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்றோடு நிறைவுபெறும் என கூறப்பட்ட நிலையில் அதிலும் தாமதம் நீடித்துவருகிறது. திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று மேற்கொள்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்று இதுவரை யாரும் திமுக சென்று பேசவில்லை.

    மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் திமுக உடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை எனவும், டெல்லி தலைமையிடம் இருந்து அறிக்கை வந்ததும் ஒப்பந்தத்தை இறுதிசெய்வோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    கூட்டணி தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அறிக்கை கிடைத்தவுடன் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதி செய்வோம்.

    தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகவே உள்ளது, எந்தப் பிரச்சனையும் இல்லை. ராஜ்யசபா சீட் குறித்த கேள்விக்கு, இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு, அப்படி மாற்றப்பட்டால் இனிப்பு கொடுக்கிறேன் என நகைச்சுவையாகக் கூறிவிட்டுச் சென்றார்.

    ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டும்பட்சத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று அண்ணா அறிவாலயம் வந்து, இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×