என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

    • சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஜய் வீட்டில் இன்று அதிகாலை வெடிகுண்டு வெடிக்கப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×