என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

237 பயணிகளுடன் வந்த சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
- இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு இன்று [பிப்ரவரி 4] அதிகாலை 237 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், தீவிர சோதனை நடத்தப்பட்டதில், விமானத்தில் வெடிபொருள்கள் எதுவுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது.
விமானம் குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று உறுதி செய்த அதிகாரிகள் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






