என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாம்பன் கடலில் துணியை வீசும் ஐயப்ப பக்தர்கள் - கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம்
    X

    பாம்பன் கடலில் துணியை வீசும் ஐயப்ப பக்தர்கள் - கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம்

    • ஐயப்ப பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்வது வழக்கம்
    • இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை. வழிபாடுகள் நடந்து வருகிறது.

    சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் சென்று திரும்பும்போது பாம்பன் பாலத்தில் வாகனத்தை நிறுத்தி துணியை கடலில் வீசுவது திடீர் வாடிக்கை ஆகியுள்ளது. இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை

    பாம்பன் பாலத்தில் இருந்தபடி ஐயப்ப பக்தர்கள் துணிகளை கடலில் வீசுவதால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×