என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
    X

    நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

    • நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் பா.ஜ.க.விடம் நிபந்தனை விதிக்கவில்லை?
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு மட்டும் வந்திருந்தால் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும்.

    சென்னை:

    ஊட்டி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாடு அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதாவை நிராகரித்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நேற்று முன்தினம் நான் சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்? நேற்று முன்தினம் அவர் தி.மு.க. மீது குற்றம் சொல்லி அறிக்கை விடுகிறார்.

    நான் கேட்கிறேன் தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டில் நீட் வந்ததா? இருந்ததா? இல்லை. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த வரை நீட் கிடையாது. ஜெயலலிதா இருந்த வரை நீட்டை தமிழ்நாட்டில் அனுமதிக்க வில்லை. அவர் மறைவுக்கு பிறகுதான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கிகளாக இருந்து இதை அனுமதித்தார்கள். இதுதான் உண்மை.

    நான் இப்போது கேட்கிறேன், கூட்டணியில் இருந்த போதும், இப்போது கூட்டணி மூலம் தேர்தலை சந்திக்க முயலும் போதும் நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் பா.ஜ.க.விடம் நிபந்தனை விதிக்கவில்லை?

    ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூலமாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தேர்தலில் உறுதிமொழி தந்தார். அதை சொல்ல வைத்தோம்.

    இப்போது கேட்கிறாரே எடப்பாடி பழனிசாமி? நீட் ரகசியத்தை சொல்லுங்கள் என்கிறாரே? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு மட்டும் வந்திருந்தால் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் மேடையில் இருந்து சவால் விடுகிறேன்.

    தமிழ்நாட்டு மாணவர்கள் மீது துளியாவது அக்கறை இருந்தால் பா.ஜ.க. கூட்ட ணிக்கு போவதற்கு முன்னாடி நீட் விலக்கு தந்தால் தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×