என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் - அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்
- நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது
- பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தவாறும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று சொல்லமுடியாது; சொல்லக்கூடாது. பாமகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட அவர் இருக்கமுடியாது என செயற்குழு, நிர்வாககுழு, பொதுக்குழு என மூன்று குழுக்களும் சொல்லியபிறகும், அவர் பாமகவின் தலைவர் என சொல்லிக்கொண்டு திரிகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்ற தீர்ப்பின்படி கட்சியின் கொடி, சின்னம், பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. என தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர்,
பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்; இதுதான் 'சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி" என்று மக்கள் பேசுகின்ற அளவிற்கு இந்தக் கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். என தெரிவித்தார்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
தேர்தல் வாக்குறுதிகளில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த வகையில் மக்கள்தான் தீர்ப்பளிப்பர் என தெரிவித்தார்.






