என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்
- மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
- மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை, இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி, இருமொழி கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிலையில், மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை, இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story






