அய்யா வைகுண்டர் வழி நடப்போம் - அண்ணாமலை

சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
அய்யா வைகுண்டர் வழி நடப்போம் -  அண்ணாமலை
Published on

சென்னை:

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள் பதிவில்,

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போதித்த, மகான் அய்யா வைகுண்டர் அவர்களின் 194 ஆவது அவதார தினம் இன்று.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். அன்பு, அறிவு, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை வாழ்வியல் நெறியாக கற்றுக் கொடுத்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரும் சமம் என்று வலியுறுத்தி, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். அய்யா வைகுண்டர் வழி நடப்போம்.

அய்யா உண்டு! என்று கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com