என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுகவுடனான அன்புமணி கூட்டணி சட்டவிரோதமானது - தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்
    X

    'அதிமுகவுடனான அன்புமணி கூட்டணி சட்டவிரோதமானது' - தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

    • கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமை இல்லை
    • அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளார்.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி மற்றும் அதன் தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார.

    அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும், கூட்டணி அமைத்ததும் சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அன்புமணிக்கு அந்த உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளதாகவும், தற்போது பாமகவின் தலைவர் பதவியை தானே (ராமதாஸ்) ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாமகவின் பெயர், கொடி அல்லது 'மாம்பழம்' சின்னத்தைப் பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×