என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவிரி பாசன மாவட்டங்களில் உர பற்றாக்குறையை தமிழக அரசு போக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
- தமிழக அரசு உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.
- கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரங்களை உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை :
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரம் வைக்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர்.
உரத்தட்டுப்பாட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சரி செய்ய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து வேளாண்மை தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரங்களை உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு தேவையான உரங்களின் விவரம் ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த உரங்களை பெற்று உழவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






