என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு: சமூக நீதிக்கு தி.மு.க. துரோகி மட்டுமல்ல விரோதி - அன்புமணி காட்டம்
- அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
கிண்டி:
சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* சமூக நீதிக்கு தி.மு.க. துரோகி மட்டுமல்ல விரோதி. தி.மு.கவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.
* சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் பொய் சொல்கிறார்.
* அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றார்.
Next Story






