என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
- பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது.
- இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.
மதுரை:
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நள்ளிரவில் மதுரை வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.
இன்று பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.






