என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க சக்திகள் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
- கடந்த தேர்தலில் பலாப் பழ சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றேன்.
- உண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று நிர்வாகிகளின் கருத்துகளை கேட்க உள்ளோம்.
மாவட்ட செயலாளர்கள், மக்களை சந்தித்து கருத்தை கேட்டறிந்த பின்னரே கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் தான் போட்டியிட்டோம். எங்களைப் பொருத்தவரை என்டிஏ கூட்டணியில் தொடர்கிறோம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்காலிகமாக தான் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் என்னை எதிர்த்து பலர் போட்டியிட்டதால் தான் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டேன்.
கடந்த தேர்தலில் பலாப் பழ சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றேன்.
உண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது.
பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






