என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபைக்கு 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க.வினர்
    X

    சட்டசபைக்கு 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க.வினர்

    • நேற்றும் அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர்.
    • மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று முன்தினம் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

    நேற்றும் அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். மேலும் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்.

    Next Story
    ×