என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
- கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜயோ, தாமோ செல்வதை தடுக்கக்கூடாது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில். த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜயோ, தாமோ செல்வதை தடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என்றும், உள்ளூர் அரசியல்வாதிகள், குண்டர்கள் இணைந்து செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.






