என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

59-வது பிறந்தநாள்: நாம் தமிழர் கட்சியினருக்கு 18 வகையான அசைவ உணவுடன் சீமான் விருந்து
- சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
- நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை வறுவல் என விதவிதமான அசைவ உணவுகள் சீமான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு கட்சியினருக்கு பரிமாற்றப்பட்டது. இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சூடாக பரிமாறப்பட்ட பிரியாணி உள்பட அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டனர்.
கைதேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு சீமான் வீட்டு வளாகத்திலேயே அசைவ உணவுகள் சமைக்கப்பட்டன. அதனை கல்யாண வீடுகள் போன்று சேர், டேபிள்கள் போட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது.






