என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
- கச்சத்தீவு அருகே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
- கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
மண்டபம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






