நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்ய 3 இடங்கள் தேர்வு

ராசிபுரம் ஆண்டகளூர் கேட் மற்றும் பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.போலீசாரின் அனுமதி கிடைக்கும் என்றும், அதன்பிறகு இந்த பிரசாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து தெரியவரும் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்ய 3 இடங்கள் தேர்வு
Published on

நாமக்கல்:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி திருச்சி, அரியலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் முதல்முறையாக தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று நாகை, திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்கள் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு கடிதத்தை வழங்கினர்.

குறிப்பாக நாமக்கல் மாநகரில் அவர் பிரசாரம் மேற்கொள்ள 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, சேலம் சாலையில் உள்ள கே.எஸ். தியேட்டர், பொய்யேரிகரை மதுரை வீரன் கோவில், பூங்கா சாலை என 3 இடங்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல ராசிபுரம் ஆண்டகளூர் கேட் மற்றும் பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் போலீசாரின் அனுமதி கிடைக்கும் என்றும், அதன்பிறகு இந்த பிரசாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து தெரியவரும் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வருகிற 27-ந் தேதியே விஜய் நாமக்கல்லுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com