என் மலர்

  தமிழ்நாடு

  ரஜினி செய்ததில் என்ன தவறு...? பிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும்? அண்ணாமலை கேள்வி
  X

  ரஜினி செய்ததில் என்ன தவறு...? பிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும்? அண்ணாமலை கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசலாமா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
  • சில தலைவர்கள் தங்கள் இருப்பை காட்டுவதற்காக ரஜினியை விமர்சிப்பதாக அண்ணாமலை கருத்து

  சென்னை:

  அரசியலுக்கு வரப்போவதில்லை என கூறி ஒதுங்கியிருந்த ரஜினிகாந்த், நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதுவும் குறிப்பாக, ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ஆளுநரிடம் அரசியல் பேசியதாகவும், ஆனால் அது குறித்து வெளியில் கூற முடியாது என்றும் கூறினார். இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர திட்டம் போடுவதாக பேசப்பட்டது. பாஜகவுடன் தொடர்புபடுத்தியும் பலர் கருத்துக்களை பதிவிட்டனர். ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசலாமா என்று பல்வேறு தரப்பினரும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

  ஆனால், ரஜினிகாந்த் ஆளுரிடம் அரசியல் பேசியதாக தெரிவித்ததில் தவறு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  சென்னையை அடுத்த நீலாங்கரையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி, கடலில் தேசியக் கொடிப் பேரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

  கடலில் தேசியக் கொடிப் பேரணியை தொடங்கி வைத்த அண்ணாமலை

  அப்போது ஆளுநர் மாளிகையில் ரஜினிகாந்த் அவரை சந்தித்து அரசியல் பேசலாமா? என்றும், அது ஆளுநர் மாளிகையா அல்லது ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என பல்வேறு தலைவர்கள் கூறுகிறார்களே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணாமலை அளித்த பதில் வருமாறு:-

  ஒரு ஆளுநர் என்பவர், அவர் பதவி வகித்துவரும் மாநிலத்தில் அனைத்து மனிதர்களையும் சந்தித்துப் பேசுவது மரபாக இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு பலர் சென்றுவருகின்றனர். கடந்த வாரம்கூட அவரது முகநூல் பதிவை பார்த்தேன், அமெரிக்காவில் ஸ்பெல்பீ சாம்பியன் பட்டம் வென்ற ஹரிணி என்ற பெண்ணை அழைத்து விருந்து அளித்து கவுரவித்தார்.


  இப்படி ஆளுநர் பலரை சந்திக்கிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் ஆளுநரை சந்தித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, 'ஆளுநரிடம் என்ன பேசினீர்கள்?' என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ரஜினி, 'ஆளுரிடம் அரசியல் பேசினேன்' என்றார். இதில் என்ன தவறு இருக்கிறது?

  கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக 'பி' டீமாக திமுக கொடுக்கும் ஆக்சிஜனில் உயிர்வாழும் சில தலைவர்கள் தங்கள் இருப்பை காட்டுவதற்காக ரஜினியை விமர்சித்துள்ளார்கள்.

  அரசியல் என்றால் ஏன் பிற்போக்குத் தனமாக யோசிக்கவேண்டும்? ஒரு மனிதனை தப்பாக பேசுவதற்குதான் அரசியல் என்று நினைக்கிறார்கள். அரசியல் இல்லாத வாழ்க்கை இல்லை. ரஜினி அரசியல் பேசினேன் என்று கூறியது, சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை பேசினேன் என்றுதான் அர்த்தம். அதில் மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசின் பணிகளை சொல்லியிருக்கலாம்.

  இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

  Next Story
  ×