search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விஜய் கட்சி கொடிக்கு சிக்கல்- பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு
    X

    விஜய் கட்சி கொடிக்கு சிக்கல்- பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு

    • 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
    • கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.

    கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதனால், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கு உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஒரே படத்தை இரு கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறியுள்ளனர்.

    Next Story
    ×