search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தக்காளி, வெங்காயம் விலையும் சரிய தொடங்கியது: காய்கறி விலை அடுத்த வாரம் முதல் குறைய வாய்ப்பு
    X

    தக்காளி, வெங்காயம் விலையும் சரிய தொடங்கியது: காய்கறி விலை அடுத்த வாரம் முதல் குறைய வாய்ப்பு

    • கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
    • தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட் டது. தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது.

    நேற்று 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து இன்று 35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் இன்று மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பச்சை காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×