search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்
    X

    பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

    • மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
    • அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து கண்காணிக்க வலியுறுத்தல்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், பள்ளிகள் திறப்பு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பேசினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகளில் பின்பற்றுகிறார்களா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. தமிழ்நாட்டில் இன்று சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் வெளியில் சதம் அடித்தது.

    வானிலை மையத்தின் அறிக்கையின்படி ஜூன் 7ம் தேதிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளதால் இதுகுறித்து விரைவில் ஆலோசனை நடத்தியப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×