search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மதயானைகளை 2 யானைகள் வீழ்த்தும் காட்சி- விஜய் கட்சியின் வீடியோ பாடல் வைரலானது
    X

    மதயானைகளை 2 யானைகள் வீழ்த்தும் காட்சி- விஜய் கட்சியின் வீடியோ பாடல் வைரலானது

    • போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன.
    • 4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன.

    தமிழக வெற்றிக் கழக பாடல் இன்று வெளியிடப்பட்டது. பின்னணியில் போர்க்கள காட்சிகளுடன் கூடிய வீடியோ பாடலாக வெளியாகி இருக்கும் அந்த பாடலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

    போர்க்களத்தில் 2 யானைகளில் அமர்ந்துள்ள இருவர் போர் வீரர்களை யானையை கொண்டு விரட்டி கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத யானைகளான அந்த 2 யானைகளையும் அடக்கி மக்களை காப்பதற்கு போர் வீரன் (விஜய்) குதிரையில் மின்னல் வேகத்தில் வருகிறார்.

    அதே போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன. போர் வீரன் குதிரையில் வந்து இறங்கியதும் 2 யானைகளும் அவனது உத்தரவுக்கிணங்க செயல்பட்டு 2 மாத யானைகளையும் துதிக்கையில் தாக்கி கீழே சாய்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோக்களை பரப்பி வரும் விஜய் கட்சியினர் அரசியல் களத்தில் எதிரிகளை இப்படித்தான் விஜய் சாய்க்கப் போகிறார் என்கிற வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன. தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பொறக்குது.

    தமிழா தமிழா நாம் வாழப் போறோமே... சட்டசபையை அலங்கரிப்போம் ரெட்டை யானை பலம் கொடுக்கும் என்பது போன்ற வரிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

    Next Story
    ×