என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...

    • தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    Live Updates

    • 20 Feb 2024 10:51 AM IST

      தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:51 AM IST

      உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:51 AM IST

      பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

    • 20 Feb 2024 10:50 AM IST

      ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:47 AM IST

      2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    • 20 Feb 2024 10:45 AM IST

      அசாடிராக்டின் பயன்பாட்டிற்காக வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    • 20 Feb 2024 10:41 AM IST

      100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    • 20 Feb 2024 10:41 AM IST

      பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்புப் பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:40 AM IST

      விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:33 AM IST

      ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

    Next Story
    ×