என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...

    • தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    Live Updates

    • 20 Feb 2024 11:06 AM IST

      முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திட ரூ.41.35 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:02 AM IST

      தோட்டக்கலைப் பண்ணை இயந்திர கண்காட்சி நடத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:59 AM IST

      கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வற்காக ஆய்வகம் அமைக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    • 20 Feb 2024 10:59 AM IST

      பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    • 20 Feb 2024 10:58 AM IST

      எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு. 12,500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 20 Feb 2024 10:57 AM IST

      ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

    • 20 Feb 2024 10:56 AM IST

      2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:55 AM IST

      செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை நிறுத்தம் ஏற்படுவதை தவிர்க்க ரூ.6.31 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:54 AM IST

      சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த ரூ.12.51 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 10:54 AM IST

      ரூ.7.92 கோடியில் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

    Next Story
    ×