என் மலர்

  தமிழ்நாடு

  டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு படிப்படியாக மூட வேண்டும்- பெருந்தலைவர் மக்கள் கட்சி தீர்மானம்
  X

  டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு படிப்படியாக மூட வேண்டும்- பெருந்தலைவர் மக்கள் கட்சி தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக மக்கள் நலன் கருதி படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • பிரதமரால் சென்னையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய விமான நிலைய வளாகத்தில் காமராஜரின் உருவ சிலையை நிறுவ வேண்டும்.

  சென்னை:

  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் போரூரில் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்தது.

  கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

  தமிழக மக்கள் நலன் கருதி படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

  இந்தியாவின் புதிய அடையாளமாக பாராளுமன்ற புதிய கட்டிடத்தையும், தமிழர்களின் நீதிக்கும், நேர்மைக்கும் மதிப்பளிக்கும் வகையில் பாராளுமன்ற அவைக்குள் தமிழர்களின் செங்கோலையும் நிறுவி பெருமை சேர்த்த மோடிக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

  பிரதமரால் சென்னையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய விமான நிலைய வளாகத்தில் காமராஜரின் உருவ சிலையை நிறுவ வேண்டும். தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கிட தமிழக அரசு முன் வரவேண்டும்.

  தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பதநீர், கள் இறக்கி விற்றுக் கொள்ளும் உரிமையை பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும்.

  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Next Story
  ×