search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வின் ஒரே பெண் வேட்பாளர் சிம்லா முத்துசோழன்
    X

    வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் பாளையங்கோட்டையில் சிம்லா முத்துசோழனுக்கு வாக்கு கேட்டு அ.தி.மு.க.வினர் சுவர் விளம்பரம் செய்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வின் ஒரே பெண் வேட்பாளர் சிம்லா முத்துசோழன்

    • கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட சிம்லா முத்துசோழன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
    • வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதில் 16 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சிய 16 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் 32 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற பெயரை சிம்லா முத்துசோழன் பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். சற்குண பாண்டியன் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    சிம்லா முத்துசோழன் 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×