என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராகுல் காந்தி பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வாருங்கள்- செல்வப்பெருந்தகை
- கோயமுத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பங்கேற்கிறார்.
- இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய அன்போடு அழைக்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா கூட்டணி சார்பாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ராகுல் காந்தி வருகை புரிகிறார்.
அதேபோல, மாலை 6 மணிக்கு கோயமுத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பங்கேற்கிறார். இந்த தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு அணி அணியாக, அலைகடலென மக்கள் திரண்டு வருகை புரிந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






