என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆக.15-க்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்... ஆரூடம் சொன்ன பிரதீப் ஜான்
    X

    ஆக.15-க்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்... ஆரூடம் சொன்ன பிரதீப் ஜான்

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் சுதந்திர தினத்திற்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் எனவும் கூறியுள்ளார்.

    Next Story
    ×