search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்!
    X

    தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்!

    • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.தி.மு.க. இப்போ இல்லைன்னு நான் நினைக்கிறேன்.
    • மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு...

    சென்னை :

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

    கே: 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. எதை பார்க்கிறது... அ.தி.மு.க.வா? பா.ஜ.க.வா?

    ப: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.தி.மு.க. இப்போ இல்லைன்னு நான் நினைக்கிறேன். பாஜகவின் உள்ளூர் கிளை கழகமாக அதிமுகவும், மாநில கட்சியாக அதிமுகவும், அதிமுகவோடு தலைமையாக பாஜக இருக்கிற மாதிரி இருக்கு.


    கே: 2026 வரை கூட்டணி இல்லைன்னு தான் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்?

    ப: மக்கள் எப்படி ஏத்துப்பார்கள்ன்னு தெரியலை.... மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு... நாங்க நடத்துறதுக்கு காரணமாக கடந்த 9 வருடமாக அதிமுக நமது உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசிடம் கொடுத்துட்டாங்க.... மாநாட்டில் முக்கியமாக நீட் எதிர்ப்பை வைத்துள்ளோம். அதிமுக மாநாட்டில் திமுக-வை திட்டுறதே முக்கியமாக இருந்தது. எங்களுடைய மாநாடு இயக்கத்தின் கொள்கைகள், இளைஞரணியின் வரலாறு, இரண்டரை ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகள் எல்லாத்தையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கறது.

    கே : தி.மு.க.வின் பலத்தில் ஒன்று கூட்டணி. 2019, 2021-ல் வலுவான கூட்டணி. 2024 ல் கூட்டணியை அனுசரித்து செல்வது எளிமையாக இருக்கும்னு நினைக்கிறீர்களா?

    ப : திமுக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமும், அதிமுகவின் கூட்டணியை மக்கள் ஏத்துக்காததுக்கு முக்கிய காரணமும் அந்த கூட்டணி வெறும் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் பேசுற கூட்டணி. திமுக கூட்டணி இயற்கையாகவே 2019 தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் நல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என ஒன்றாக செய்வார்கள். அதிமுக கூட்டணி ஸ்டார் ஓட்டலில் மட்டும் சந்தித்து பேசுவார்கள். கடைசி நிமிடம் வரை கூட்டணி குறித்து இழுப்பார்கள்.

    Next Story
    ×