என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்று 46-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
Next Story






