search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு இன்று டெல்லி சென்றது
    X

    அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு இன்று டெல்லி சென்றது

    • தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
    • கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்த சந்திப்பு இன்று மாலையில் நடைபெற உள்ளது.

    மத்திய மந்திரியை சந்திப்பதற்காக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜோதிமணி (காங்கிரஸ்), தம்பிதுரை (அ.தி.மு.க.), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), ஜி.கே.வாசன் (த.மா.கா.), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஏ.கே.பி.சின்னராஜ் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    அமைச்சர் துரை முருகனும் இன்று காலையில் டெல்லி சென்றார்.

    மத்திய மந்திரியை சந்திக்கும் போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.

    Next Story
    ×