என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
- இன்று தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. நேற்றுமுன்தினம் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இருப்பினும் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,800-க்கும் சவரன் ரூ.54,400-க்கும் விற்பனையாகிறது.
Next Story






