search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை- பீர் பாட்டிலை கொடுக்க மறுத்ததால் தீர்த்துக்கட்டிய வாலிபர்கள் கைது
    X

    ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை- பீர் பாட்டிலை கொடுக்க மறுத்ததால் தீர்த்துக்கட்டிய வாலிபர்கள் கைது

    • பீர்பாட்டிலை கொடுக்க மறுத்த ஓட்டல் ஊழியரை, வாலிபர்கள் கொன்ற சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் சேலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர். குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து நாமக்கல்லில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு 11 மணி அளவில் கண்ணன் ஒரு பீர் பாட்டிலுடன் திருச்செங்கோடு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் கண்ணன் லிப்ட் கேட்டுள்ளார். அவர்கள் கண்ணனை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

    நல்லிபாளையம் பாலம் அருகில் சென்ற போது இருவரில் ஒருவர் கண்ணனிடம் இருந்த பீர் பாட்டிலை பிடுங்கிக் கொண்டார். அந்த பீர் பாட்டிலை திருப்பி தருமாறு கண்ணன் கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கண்ணனை சரமாரி தாக்கி, மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று கல்லால் அவரது முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாமக்கல் ராமாவரம் புதூரை சேர்ந்த பாஸ்கர் மகன் சக்திவேல் (22), சேந்தமங்கலம் ரோடு குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுதம் (28) ஆகிய இருவரும் சேர்ந்து கண்ணனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர்.

    பீர்பாட்டிலை கொடுக்க மறுத்த ஓட்டல் ஊழியரை, வாலிபர்கள் கொன்ற சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×