search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன
    X

    கனமழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன

    • மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது.
    • 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு 10 மணி முதல் முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. சென்னை கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் விடாமல் மழை பெய்ததால் ரோடுகளில் மழை நீர் தேங்கியது.

    அதிலும் குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மிக அதிகமாக 14 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது. இடைவிடாமல் மழை பெய்ததால் ஓடுபாதை தெரியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

    இதன் காரணமாக துபாய், அபுதாபி, தோகா, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர், மஸ்கட், கொழும்பு, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. இதே போல் சென்னையில் இருந்து துபாய், லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட வேண்டிய 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    காலை 7 மணிக்கு பிறகு தான் மழை பெய்வது குறைந்தது. அதன் பிறகுதான் டெல்லி, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டது. சென்னையில் விடிய விடிய திடீரென மழை பெய்ததால் விமான பயணிகள் பலர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வராமல் பலமணி நேரம் காத்திருந்து அதன் பிறகே வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    Next Story
    ×