என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மோடிக்கு கருப்புகொடி காட்ட முயற்சி- சென்னையில் 150 காங்கிரசார் கைது
    X

    மோடிக்கு கருப்புகொடி காட்ட முயற்சி- சென்னையில் 150 காங்கிரசார் கைது

    • பாதுகாப்பு கருதி போராட்டத்தில் ஈடுபட இருந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பனகல் மாளிகை அருகே திரண்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    சென்னை:

    சென்னைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்தது.

    சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று காலை 11 மணியளவில் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தார்கள். ஆனால் போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

    பாதுகாப்பு கருதி போராட்டத்தில் ஈடுபட இருந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாறில் உள்ள தங்கபாலு, நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், போரூர் காரம்பாக்கத்தில் உள்ள மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், ராஜலட்சுமி, நிலவன், வினோத், மாவட்ட தலைவர்கள் டில்லிபாபு, எம்.எஸ்.திரவியம், முத்தழகன் உள்பட பலரது வீடுகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

    தங்கள் எல்லைக்குள் போராட்டம் நடத்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிலரை போலீசார் விட்டனர். இதையடுத்து அவர்கள் பனகல் மாளிகை அருகே திரண்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    தடையை மீறி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் இமயாகக்கன், பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், அடையாறு துரை மற்றும் திருவான்மியூர் டி.கே.முரளி உள்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கிண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளார்கள்.

    Next Story
    ×