search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுவகைகளை பார்களில் விற்றால் கடும் நடவடிக்கை
    X

    டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுவகைகளை 'பார்களில்' விற்றால் கடும் நடவடிக்கை

    • டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
    • அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் (பார்) மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.


    இச்செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும். மதுக் கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது.

    டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை மதுக் கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×