search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

    • அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்.

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் பலமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 15-ம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

    Next Story
    ×