என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி (கோப்பு படம்)
உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர்- ஆர்.எஸ்.பாரதி பேச்சு
- எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்.
- கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது.
சென்னை ஆர்.எஸ் புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை . உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர். எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது, அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






