search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
    X

    பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்

    • பிரதமர் மோடி தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
    • பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன.

    பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ தமிழ்நாட்டு மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

    அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.

    நெடுஞ்சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.

    சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், பாராளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்து உள்ளார்.

    Live Updates

    • 17 Sept 2024 1:31 PM IST

      பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

      பிரதமர் நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 12:17 PM IST

      பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

      மூன்றாவது முறையாக வலிமையான பிரதமராக நம் நாட்டிற்கு வலிமை கூட்டி.... உலகிற்கு வழிகாட்டி.... வலம் வந்து கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 10:43 AM IST

      மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள பிறந்த நாளில் செய்தியில் “பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... இந்த முயற்சி (ஸ்வச்தா அபியான்) 2014-ல் பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டது. இது முழு நாட்டிற்கும் தெய்வீக ஆசீர்வாதம் மற்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் தெய்வீக செய்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • 17 Sept 2024 10:37 AM IST

      மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்லாண்டு கால ஆயுள் பெற்று, மாறாத மகிழ்வுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 10:32 AM IST

      பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

      பிரதமர் நரேந்திர மோடி இன்று 74-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு நான் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    • 17 Sept 2024 10:30 AM IST

      அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

    • 17 Sept 2024 10:22 AM IST

      உள்துறை மந்திரி அமித்ஷா பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

      அயராத உழைப்பு, பக்தி மற்றும் தொலைநோக்கு பார்வையால் மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலகளவில் புதிய நற்பெயரையும் பெற்று தந்த பிரபலம் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • 17 Sept 2024 10:19 AM IST

      ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களின் மிகச்சிறந்த தலைமை பண்பின் மூலம் நாட்டின் வளத்தையும், கவுரவத்தையும் மேம்படுத்தி உள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 17 Sept 2024 10:11 AM IST

       மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பத்தின் மூலம் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 10:05 AM IST

      திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×