search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆம்னி பேருந்து சங்கம் கோரிக்கை
    X

    முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆம்னி பேருந்து சங்கம் கோரிக்கை

    • கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் அறிவிப்பு.
    • ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது இயலாத காரியம்.

    சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    ஆனால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. நேற்றிரவு திடீரென அறிவிப்பு வழங்கி 30ம் தேதிக்குள் காலி செய்யுமாறு கூறினர். தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது.

    2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், எப்படி இடத்தை மாற்ற முடியும்.

    தற்போது திடீரென பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என்றால் என்ன செய்வது ?

    அறிவிப்பு செய்த இரு நாட்களுக்குள் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது இயலாத காரியம்.

    மேலும், அரசு முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கிளாம்பாக்கத்தில் 144 பேருந்துகளை நிறுத்த தான் இடம் உள்ளது. 1400 ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லை.

    நீதிமன்ற ஆணைகளை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சங்க நிர்வாகிகள் பங்கேற்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×